திருப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 305 பேர் கைது
திருப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 305 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
விவசாயிகளைப்பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாக ராஜன், வடக்கு தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர். வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார் கள்.
305 பேர் கைது
தொண்டர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் காய்கறி மாலை அணிந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தங்கராஜ், ராமதாஸ், ஈஸ்வரமூர்த்தி, எம்.எஸ்.ஆர். ராஜ், எம்.எஸ்.மணி, சரவணன், ராஜ்மோகன்குமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் 40 பெண்கள் உள்பட 305 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மதியம் அனைவரையும் விடுவித்தனர்.
Related Tags :
Next Story