வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாகர்கோவிலில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாகர்கோவிலில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களையும் உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதி செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கருப்புக்கொடியேந்தி 5-ந் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வெற்றியை நோக்கி போராட்டம்
டெல்லியின் அனைத்து வாயில்களையும் அடைக்கும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதைக்கண்டு மத்திய அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. தாங்கள் கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசு தெரிவிக்கும் அளவுக்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகளின் போராட்டம் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்த சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் தமிழகத்தில் முதன்முதலில் குரல் கொடுத்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்குப்பிறகாவது மத்திய அரசு தங்களை திருத்திக் கொண்டு, 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பச்சைத்துண்டு அணிந்தனர்
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாநில நிர்வாகிகள் தில்லைச்செல்வம், ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், அவைத்தலைவர் ஜோசப்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சேக்தாவூது, பெஞ்சமின், அழகம்மாள்தாஸ், செயற்குழு உறுப்பினர்கள் சாய்ராம், தாமரைபாரதி, வக்கீல்கள் ஷகிலா, சதாசிவம், உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் எப்.எம்.ராஜரத்தினம், மதியழகன், குட்டிராஜன், சற்குருகண்ணன், ரகீம், ராஜேந்திரன், விவசாய அணி தம்புரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் பச்சைத்துண்டுகளை அணிந்திருந்தனர். அப்போது ஏராளமானவர்கள் தி.மு.க. கொடிகளையும், கருப்புக் கொடிகளையும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். விவசாய அணி அமைப்பாளர் தம்புரான் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டரில் வந்து கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story