திருப்பத்தூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


திருப்பத்தூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Dec 2020 8:45 AM GMT (Updated: 6 Dec 2020 9:30 AM GMT)

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருப்பத்தூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

திருப்பத்தூர், 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், அவைத்தலைவர் முனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன் வரவேற்றார்.

வேலூர் நாடாளுன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, வில்வநாதன், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன், துணை அமைப்பாளர் டி.என்.டி.சுபாஷ், டி.பி.ரமேஷ், மாவட்ட இளைஞரணி துனண அமைப்பாளர் ஆர்.தசரதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் நன்றி கூறினார்.

Next Story