தர்மபுரி, பாலக்கோட்டில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


தர்மபுரி, பாலக்கோட்டில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Dec 2020 4:45 PM IST (Updated: 6 Dec 2020 4:27 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, பாலக்கோட்டில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பச்சை துண்டு அணிந்து வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், வேடம்மாள், சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் பிரபு ராஜசேகர், சந்திரமோகன், பொன்.மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், செங்கண்ணன், சிவபிரகாசம், சண்முகநதி, தேசிங்குராஜன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாதையன், சூடப்பட்டி சுப்பிரமணி, வக்கீல் மணி, மாதேசன், காளியப்பன், ராஜகுமாரி மணிவண்ணன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம், முன்னாள் மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் முருகன், ரவி, அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கோபால், குமரவேல், குட்டி, செல்வராஜ் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story