வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்தது


வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்தது
x
தினத்தந்தி 6 Dec 2020 11:15 AM GMT (Updated: 6 Dec 2020 11:04 AM GMT)

வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரி, ஓசூரில் தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் டெல்லியில் உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்ரி கடலரசு மூர்த்தி, சந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொன் குணசேகரன், தம்பிதுரை, நகர செயலாளர் நவாப், அணிகளின் அமைப்பாளர்கள் ரஜினி செல்வம், பரிதா நவாப், டாக்டர் மாலதி, அமீன், அஸ்லம், காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூரில் நேற்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷேக் ரஷீத், ஓசூர் மாநகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, தொழில் அதிபர் ஆனந்தய்யா, மாவட்ட பொறியியல் பிரிவு அமைப்பாளர் ஞானசேகரன், தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வடிவேலு மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நன்றி கூறினார்.

Next Story