நினைவு தினம்: அம்பேத்கர் சிலைக்கு, தலைவர்கள் மரியாதை மாலை அணிவித்து வணங்கினர்


நினைவு தினம்: அம்பேத்கர் சிலைக்கு, தலைவர்கள் மரியாதை மாலை அணிவித்து வணங்கினர்
x
தினத்தந்தி 7 Dec 2020 4:15 AM IST (Updated: 6 Dec 2020 11:32 PM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி, 

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்காவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்றனர். அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. நகர செயலாளர் அன்பானந்தம், மாநில துணைச்செயலாளர் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., இணை செயலாளர்கள் ராமதாஸ், காசிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையிலும், வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, அமுதா குமார், பொருளாளர் சண்.குமாரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத்தலைவர் செல்வம், பொதுச்செயலாளர் மோகன், மாநில செயலாளர் நாகராஜன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ மனோகர், அவைத்தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் விமலா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையிலும், புதுவை ஆதிதிராவிட அரசு ஊழியர்கள் நலசங்கத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் ராஜகோபால், புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராம்குமார், லோக் ஜன சக்தி சார்பில் தேசிய செயலாளர் உமா சுதன், டாக்டர் அம்பேத்கர் தேசிய விருதாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் முருகன், ஆதிதிராவிட அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story