அத்தியூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் கரை உடைப்பு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
அத்தியூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் கரை உடைந்தது. கரைப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் உள்ள ஏரி 619 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு நீராதாரமாக விளங்கும் வெள்ளாற்றின் கரையில், கீழகுடிக்காடு தடுப்பணையில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் அமைக்கப்பட்டு, அதன் வழியாக தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அந்த வழியாக வெளியேறி, மீண்டும் வெள்ளாற்றுக்கே செல்கிறது. இதனால் ரூ.8 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டியும், பாசனத்திற்காக தண்ணீர் ஏரிக்கு செல்லாமல் வீணாகிறது. இதனால் விளை நிலங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
தடுப்புச்சுவர்
இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர், கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தினர். கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோதும், இதேபோல் தண்ணீர் வெளியேறி வீணானது குறிப்பிடத்தக்கது. எனவே வாய்க்கால் கரையில் நிரந்தரமாக தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story