அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி,
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதுபோல், தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் தலைமையிலும், காங்கிரசார் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையிலும், பாரதீய ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமையிலும் மாலை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையிலும், தே.மு.தி.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் காமராஜ் தலைமையிலும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தலைமையில், திருச்சி கீழப்புலிவார்டு இ.பி.ரோட்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கும், அதனை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முசிறி, தா.பேட்டை
முசிறி கைகாட்டியில் புரட்சியாளர் அம்பேத்கர் 64-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முசிறி தொகுதி செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். அப்போது அம்பேத்கர் உருவப்படத்திற்கு தா.பேட்டை தி.மு.க ஒன்றிய செயலாளர் சேகரன், முசிறி நகர செயலாளர் சிவகுமார், காங்கிரஸ் நகர தலைவர் சுரேஷ், ம.தி.மு.க. நகர செயலாளர் இளங்கோ, சி.பி.எம். பொறுப்பாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தா.பேட்டை கடைவீதியில் அம்பேத்கர் நினைவுதினத்தை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய உறுப்பினர் கே.சேகர் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தா.பேட்டை மேலத்தெரு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story