திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் மூங்கில் பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் மூங்கில் பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் ரெயில்வே கீழ்பாலத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த கனமழை நேற்று சற்று ஓய்ந்தது. ஆனாலும் காலை முதல் மாலை வரை லேசான தூறல் மட்டுமே இருந்தது. மழை குறைந்தாலும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதனால் ஆற்றின் கரையை தாண்டி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. திருவாரூர் அருகே சித்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் கரையை தாண்டி அடிபுதுச்சேரி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் கள்ளிக்குடி-அடிபுதுச்சேரி இணைப்பு பாதை துண்டிப்பானது. இதனால் அடிபுதுச்சேரி பகுதி மக்கள் வெகுதூரம் சுற்றி திருவாரூர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் குறையாததால் ஊருக்குள் புகுந்த தண்ணீர் வடிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது.
மூங்கில் பாலம் அடித்து செல்லப்பட்டது
திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதி மக்கள் திருவாரூர் பகுதிக்கு எளிதாக வருவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒடம்போக்கியாற்றின் குறுக்கே பாலம் இருந்து வந்தது. இந்த பாலம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. அதற்காக தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஒடம்போக்கியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் தற்காலிக மூங்கில் பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாதை துண்டிக்கப்பட்டதால் காட்டூர் பகுதி மக்கள் நீண்டதூரம் சுற்றி திருவாரூர் வருகின்றனர்.
ரெயில்வே கீழ்பாலத்தை மழைநீர் சூழ்ந்தது
திருவாரூர் அருகே கூடூர் காட்டாற்று பாலம் அருகில் கல்யாணமகாதேவி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்ற எந்த தேவையாக இருந்தாலும் திருவாரூருக்கு தான் வர வேண்டும். இந்த பாதையில் காட்டாற்று பாலம் அருகில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதையை கடந்து செல்ல வேண்டும். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆள்இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றிடும் வகையில் காட்டாற்று கரையில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பு அமைத்து கீழ்பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றின் கரையில் கீழ்பாலம் கட்டுவதால் ஆற்று தண்ணீர் உள்புகும் என்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கீழ்பாலத்தில் மோட்டார் இணைப்பு ஏற்படுத்தி தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் எந்தவித மோட்டாரும் பொருத்தப்படவில்லை. தற்போது பெய்த மழையில் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இதன் அருகே தற்காலிக பாதை ஏற்படுத்தி ரெயில் பாதையை கடந்து செல்கின்றனர். ஆள் இல்லாத ரெயில் கேட்டுகளை பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டும் என்பது பயனில்லாமல் போனது. தற்போது இந்த பாதையில் ரெயில் அடிக்கடி இயக்கப்படும் நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் மக்கள் ரெயில் பாதையை கடந்து செல்கின்றனர். இதற்கு ரெயில்வே நிர்வாகம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story