8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறப்பு: கொரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வகுப்பறைகள் தயார்


8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறப்பு: கொரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வகுப்பறைகள் தயார்
x
தினத்தந்தி 7 Dec 2020 7:17 AM IST (Updated: 7 Dec 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

8 மாதங்களுக்கு பிறகு இன்று இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டது. இதில் கடந்த 2-ந்தேதி முாதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) கலை அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவகல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், அவர்களுக்கான விடுதிகளும் தொடங்கப்பட உள்ளன.

இதையொட்டி, கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அந்த வகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமிநாசினி தெளிப்பு

இதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதில் விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லுாரியில் கடந்த 3 நாட்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று திறப்பதற்கு தயாராகி உள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story