நாகர்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 783 பேர் மீது வழக்கு


நாகர்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 783 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Dec 2020 8:07 AM IST (Updated: 7 Dec 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 783 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாகர்கோவில்,

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு ஆதரவாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் உள்பட 600 பேர் மீது நேசமணிநகர் போலீசார் தொற்று பரவல் தடுப்பு சட்டம் மற்றும் போலீஸ் தடையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு

இதே போல விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் வடசேரியில் ஊர்வலம் மற்றும் மறியல் நடத்திய 183 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 31 பேர் மீது சட்ட விரோதமாக கூடி பொது பாதையை தடை செய்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததோடு, ஆபத்தான நோய் பரப்பும் செயலை செய்ததாகவும் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Next Story