ஊட்டியில் தொடர் மழை: சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டியில் தொடர் மழையால் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஊட்டி-தொட்டபெட்டா சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். இதேபோல் ஊட்டி-தும்மனட்டி சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.
கடும் குளிர்
நேற்று காலை ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சாண்டிநல்லா பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து கிடந்தது. அரசு பஸ்கள் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. ஊட்டி-இடுஹட்டி சாலையின் குறுக்கே விழுந்த மரம் அகற்றப்பட்டது. ஊட்டி நகரில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது.
மழை அளவு
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-11.8, கிளன்மார்கள்-18, கல்லட்டி-12, உலிக்கல்-20, கோடநாடு-14.5 உள்பட மொத்தம் 132.3 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 4.56 ஆகும். தொடர் மழை பெய்து வருவதால் சாலையோரங்களில் உள்ள மண் ஈரப்பதமாக உள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மரங்கள் விழ வாய்ப்பு உள்ளதால் மரங்களுக்கு அடியில் வாகனங்கள் நிறுத்துவதையும், பொதுமக்கள் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story