திண்டுக்கல்லில் பயங்கரம்: நிர்வாணமாக கட்டி வைத்து தனியார் பள்ளி ஊழியர் குத்திக்கொலை
திண்டுக்கல்லில், நிர்வாணமாக கட்டி வைத்து தனியார் பள்ளி ஊழியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்தார். கடந்த 4-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற மணிகண்டன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள், மணிகண்டனை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் மணிகண்டனின் மனைவி சுலோச்சனா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை, திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயான வளாகத்தில் உள்ள காத்திருப்போர் அறையில் உள்ள இரும்பு தூணில் நிர்வாணமாக கட்டப்பட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக கிடந்தார். அவருடைய வயிற்றில் கத்துக்குத்து காயங்கள் இருந்தன.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது, மணிகண்டனின் உடல் அருகே கிடந்த சாக்குப்பையை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மணிகண்டனை மது குடிப்பதற்காக மின் மயான வளாகத்தில் உள்ள காத்திருப்போர் அறைக்கு மர்ம நபர்கள் அழைத்து வந்திருக்கலாம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கலாம். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், மணிகண்டனை அங்குள்ள இரும்பு தூணில் கட்டி வைத்து, வாயையும் துணியால் அடைத்து கத்தியால் அவருடைய வயிற்றில் சரமாரிய குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம். ஆனால் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story