வாணியம்பாடி-திருப்பத்தூர் இடையே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


வாணியம்பாடி-திருப்பத்தூர் இடையே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2020 11:11 AM IST (Updated: 7 Dec 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர், மாவட்ட தலைநகர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் ஆகிய பகுதிகளில் இருந்து சாலை வழியாக வாகனங்களில் திருப்பத்தூர் செல்ல டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.

பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமான உள்ளது. ஆம்புலன்ஸ் வேகமாக செல்ல முடியவில்லை. வாணியம்பாடி, திருப்பத்தூர் இடையே மோசமாக உள்ள குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோசமான சாலை குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப், முகநூல், சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

திருப்பத்தூர், வாணியம்பாடி இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி சாலை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டபோது, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை எடுத்துக் கொண்டனர். இதனால் கடந்த ஆண்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டு, பிறகு மீண்டும் ரூ.299 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகளை தொடங்கி முடிக்க ஒப்பந்ததாரரிடம் பேசி உள்ளோம்.

விரைவில் சாலைப் பணிகள் தொடங்க உள்ளது. மழை காலம் முடிந்ததும் குண்டும் குழியுமான சாலை சீர் செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதை, கவனத்தில் கொண்டு செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலை பணிகள் தொடங்கும் வரை குண்டும் குழியுமான சாலைகளில் மண்ணை கொட்டி மூடி பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story