சோதனை சாவடியில் டெம்போ மோதி போலீஸ்காரர் பலி குடிபோதையில் இருந்த டிரைவர் கைது


சோதனை சாவடியில் டெம்போ மோதி போலீஸ்காரர் பலி குடிபோதையில் இருந்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2020 6:40 AM IST (Updated: 8 Dec 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

சோதனை சாவடியில் டெம்போ மோதி போலீஸ்காரர் பலியானார். குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

புனே, 

புனே- சோலாப்பூர் நெடுஞ்சாலை வரவடே சோதனை சாவடியில் சம்பவத்தன்று போலீஸ்காரர் சாகர் சவுபே(வயது40) என்பவர் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் அந்த வழியாக வந்த டெம்போவை வழிமறித்தார். இதில் டெம்போ டிரைவர் சோதனை சாவடியில் நிற்காமல் செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டெம்போ போலீஸ்காரா் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அருகில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள் தப்பிச்செல்ல முயன்ற டெம்போ டிரைவரை பிடித்தனர். விசாரணையில், டிரைவர் குடிபோதையில் போலீஸ்காரர் மீது டெம்போவை ஏற்றியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவர் நவ்நாத் குட்டேவை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story