தஞ்சை மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு
தஞ்சை மாவட்டத்தில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மருத்துவக்கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 13-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
மாணவ, மாணவிகள் நேற்று காலை முதல் வகுப்புகளுக்கு சென்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர். அவ்வாறு வந்த மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவக்கல்லூரி
8 மாதங்களாக மூடப்பட்டு இருந்த தஞ்சை மருத்துக்கல்லூரியும் நேற்று தொடங்கப்பட்டு, முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்றன. முதலாண்டு மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் டாக்டர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் செல்வம் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்று பேசினர்.
பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மருதுதுரை கூறியதாவது:-
இறுதியாண்டு மாணவர்கள் 150 பேரும், முதலாமாண்டு மாணவர்கள் 150 பேரில் 148 பேரும் இன்று வகுப்புகளுக்கு வந்துள்ளனர். முதலாமாண்டை சேர்ந்த 2 மாணவர்களில் சீர்காழி, கரூரை சேர்ந்த தலா ஒரு மாணவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதால் அவர்கள் வரவில்லை. கல்லூரிக்கு வந்த 298 பேரும் பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் அனைவரும் வகுப்புகளுக்கு வந்துள்ளனர்.
சமூக இடைவெளி
இதுவரையில் நாம் இருந்த வாழ்க்கை முறையும், கல்லூரி நடைமுறையும் கொரோனாவிற்கு பின்னர் அதேபோலவே இருக்காது. எனவே, நாம் சில மாற்றங்களை நமக்குள் கொண்டுவர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற கூடுதலை தவிர்க்க வேண்டும். தனிமனித அளவில் நோய் பரவலை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
முகக் கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்தல், விடுதிக்கு திரும்புகையில் குளித்துவிட்டு அறைக்கு செல்லுதல், மருத்துவமனைக்கு ஒரே நுழைவு வாயில் வழியாக நுழைதல் மற்றும் திரும்புதலை கடைப்பிடித்தல், வகுப்புகளுக்குள் இடைவெளியைக் கடைப்பிடித்து கிருமிநாசினிகளை உபயோகித்தல் ஆகிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story