நிலுவை தொகையை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்
நிலுவைத்தொகையை வழங்கக்கோரி அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் உள்ள தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.90 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த பணத்தை கேட்டு விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவலறிந்து வந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கேப்டன் வளன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போது ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படாமல் உள்ளது. விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும், அதன் பின்னர் விவசாயிகளுக்கு பாக்கித் தொகை படிப்படியாக வழங்கும் பணி நடைபெறும் எனவும், வருகிற 24-ந் தேதிக்குள் இந்த பணி முற்றிலும் முடிவடைந்து விடும் எனவும் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்

Related Tags :
Next Story