நாகர்கோவிலில் டாக்டர்கள் இன்று தர்ணா போராட்டம் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு
குமரி மாவட்ட டாக்டர்கள் நாகர்கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவ சங்க அகில இந்திய தலைவர் ஜெயலால் கூறினார்.
நாகர்கோவில்,
இந்திய மருத்துவ சங்க அகில இந்திய தலைவர் ஜெயலால், குமரி மாவட்ட மருத்துவ சங்க கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார், செயலாளர் தாணப்பன், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது கூறியதாவது:-
இந்திய வகை மருத்துவ மத்திய சபையின் தனிமனித பாதுகாப்பற்ற அறிவிப்பான ஆயுர்வேத டாக்டர்கள் மனித உடலை அறுவை சிகிச்சை செய்ய வழி வகுக்கும் ஆணையை திரும்பப்பெற கோரியும், இதனை முறைப்படுத்தும் 4 குழுமங்களை கலைக்க வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 8-ந் தேதி (அதாவது இன்று) அகில இந்திய அளவில் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை டாக்டர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளது. நவீன மருத்துவத்தை அரசாங்கமும், தேசிய மருத்துவ குழுமமும் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவத்துறையையும் தனித்தனியாக வளர வைத்து அதன் கட்டமைப்பு, ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் தர்ணா போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட உள்ளன.
அடுத்த கட்டமாக...
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தப்படும். குமரி மாவட்டத்தில் 1,300-க்கும் அதிகமான டாக்டர்கள் உள்ளனர். ஆனால் கொரோனாவை கருத்தில் கொண்டு சுமார் 100 டாக்டர்கள் மட்டும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்த போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். இல்லை எனில் அடுத்த கட்டமாக 11-ந் தேதி அகில இந்திய அளவில் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உயிர் காப்பு அவசர சிகிச்சை தவிர அனைத்து வெளிநோயாளிகள் பிரிவுகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்படும். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் மேலும் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story