8 மாதங்களுக்கு பிறகு திருப்பூரில் கல்லூரிகள் திறப்பு ஆர்வத்துடன் வகுப்புகளுக்கு வந்த மாணவ-மாணவிகள்
திருப்பூரில் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர். வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டனர்.
திருப்பூர்,
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து.
அதன்படி நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் நேற்று திறந்தன.
உடல் வெப்பநிலை பரிசோதனை
இளங்கலை இறுதியாண்டு படிக்கும் அனைத்து துறை மாணவர்கள், முதுகலை இறுதியாண்டு படிக்கும் அறிவியல் துறை சார்ந்த மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று கல்லூரிக்கு வந்தனர். சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். கல்லூரிக்கு வந்த மாணவ- மாணவிகள் அனைவரும் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படவில்லை. வகுப்பறையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். கல்லூரி வளாகத்தில் கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல் ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி வைக்கப்பட்டு மாணவ- மாணவிகள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்தினார்கள். பாடங்கள் அனைத்தும் மாணவர்களை பகுதி பகுதியாக பிரித்து சுழற்சி முறையில் நடத்தப்பட்டன.
மாணவ-மாணவிகள் ஆர்வம்
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டமாக நிற்க அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கழிவறைகளில் போதுமான அளவு தண்ணீர் வசதி செய்யப்பட்டு அடிக்கடி சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து மாணவ-மாணவிகள் பின்பற்ற அந்தந்த கல்லூரி முதல்வர்கள் கண்காணித்தனர். 8 மாதங்களுக்குப் பிறகு நண்பர்களை, தோழிகளை சந்தித்த மகிழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் காணப்பட்டனர்.
மகிழ்ச்சி
திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (பி.எஸ்சி.கணினி அறிவியல்)கூறும்போது“ கடந்த பல மாதமாக ஆன்லைன் வகுப்பில் படித்ததை விட தற்போது கல்லூரிக்கு நேரில் வந்து படிப்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆன்லைனில் படிப்பதைவிட நேரடி வகுப்பில் படிக்கும் பாடம் மனதில் எளிதாக பதிவாகிறது. நீண்ட நாட்கள் வீட்டில் இருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றமான நிலை மனதிற்கு பெரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது”என்றார்.
திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்த அஸ்வினி (பி.எஸ்சி. விலங்கியல்) கூறும்போது, “ஆன்லைன் வகுப்பில் படித்த போது பாடங்கள் புரிந்தது போன்று இருக்கும். ஆனால் வகுப்பு முடிந்த சில மணி நேரத்தில் படித்தவை மறந்து போகின்றன. ஆனால் தற்போது நேரில் பாடம் படிப்பது ஆழ்மனதில் பதிவாகின்றது. இதேபோல் ஆன்லைன் வகுப்பு நேரத்தில் வீட்டில் பல்வேறு விஷயங்களால் கவனச்சிதறல் ஏற்பட்டது. ஆனால் கல்லூரியில் பாடங்களை உன்னிப்பாக கவனிக்க முடிகிறது. இதேபோல் ஆன்லைன் வகுப்பு நேரத்தில் சற்று அலட்சியமான மனநிலை இருந்தது. ஆனால் தற்போது பொறுப்புணர்வு அதிகமாகியுள்ளது” என்றார்.

Related Tags :
Next Story