திருச்சி அருகே பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி 400 பேரிடம் பணம் மோசடி என்ஜினீயர் கைது
திருச்சி அருகே பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி 400 பேரிடம் பணம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
சமயபுரம்,
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் தினேஷ் (வயது 26). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள இவர், திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தால் ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ காப்பீடு சலுகை பெற்று தருவதாகவும், அதற்காக ஆட்களை சேர்த்து வருவதாகவும், இந்த திட்டத்தில் சேர ஒவ்வொருவரும் ரூ.100 கொடுத்தால் காப்பீடு திட்ட அட்டை மற்றும் அதனை லேமினேஷன் செய்து தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த கிராமத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் சுமார் 400 பேர் தலா ரூ.100 கொடுத்து அவரிடம் சேர்ந்துள்ளனர். அவர்களை எதுமலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரும்படி தினேஷ் கூறியுள்ளார்.
ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
அவர் மீது சிலருக்கு சந்தேகம் ஏற்படவே, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் பணம் வசூல் செய்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மண்ணச்சநல்லூர் தாசில்தார் மலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோரும் அங்கு சென்று யாரைக் கேட்டு இதுபோன்ற செயலுக்கு ஊராட்சி அலுவலக பெயரை பயன்படுத்த அனுமதித்தீர்கள் என்று கேட்டு கண்டித்தனர்.
என்ஜினீயர் கைது
அதைத்தொடர்ந்து என்ஜினீயர் தினேசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம், பிரிண்டர் எந்திரம், லேமினேசன் செய்யும் எந்திரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில ஊராட்சிகளிலும் சில நபர்கள் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story