நெல்லை, வள்ளியூரில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை, வள்ளியூரில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2020 7:11 AM IST (Updated: 9 Dec 2020 7:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, வள்ளியூரில் டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையில் ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று குறிப்பிட்டு உள்ளது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சம்பந்தப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது. இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நெல்லை கிளை சார்பில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிளை தலைவர் அன்புராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியம், அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் முகமது ரபி, செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்-களக்காடு

இதேபோல் இந்திய மருத்துவ சங்க வள்ளியூர் கிளை சார்பில் வள்ளியூர் புதிய பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க பொருளாளர் திலக், டாக்டர்கள் சங்கரன், சங்கரேஸ்வரன், வேலன், குமாரமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவர்கள் சங்க வள்ளியூர் கிளை செயலாளர் டாக்டர் ஜேக்கப் சுவரூப் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சொக்கலிங்கம், ஆதம் ஷேக் அலி, மதிவாணன், ராணி சந்திரசேகரன், தஸ்லிமா, பாஸ்கர், நிர்மலா பாஸ்கர் கலந்து கொண்டனர்.

Next Story