மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
தென்காசி,
வங்க கடலில் உருவான புயல் வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டு இருப்பதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பாபநாசம் அணை
இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 129.45 அடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 125.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 509 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 98.35 அடியாக இருந்தது. நேற்று மேலும் 2.15 அடி உயர்ந்து 100.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 357 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.60 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
குண்டாறு நிரம்பியது
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே குண்டாறு அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அணையில் இருந்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.
நெல்லையை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. பாளையங்கோட்டை, நெல்லை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சில குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது.
தென்காசி பகுதியில் நேற்று காலையில் இருந்தே விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மதியம் 1 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழை 2.30 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து சீராக இருந்தது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் - 43, சேர்வலாறு - 21, மணிமுத்தாறு - 15.4, அம்பை - 5.40, நாங்குநேரி - 1, ராதாபுரம் - 24, கடனா - 3, ராமநதி - 3, கருப்பா நதி - 8, அடவிநயினார் - 5, ஆய்க்குடி - 14.2, சங்கரன்கோவில் - 2, செங்கோட்டை - 1, சிவகிரி - 4, தென்காசி - 7.

Related Tags :
Next Story