ஆயுர்வேத டாக்டர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பதை எதிர்த்து தஞ்சையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை இணைப்பதை எதிர்த்து தஞ்சையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை இணைப்பதை எதிர்த்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், வருகிற 11-ந் தேதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்து இருந்தனர். அதன்படி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர். ராஜேந்திரன், பொருளாளர் டாக்டர் வினோத், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள் எழுப்பினர்
இந்திய மருத்துவ முறைகளை தனியாக முன்னேற்றமடைய செய்ய வேண்டும். அலோபதி மருத்துவ முறையும், ஆயுர்வேத மருத்துவ முறையும் கலப்பதால் நோயாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களை புரிந்துகொள்ள வேண்டும். உலக அளவில் இந்திய மருத்துவ முறைகள் இல்லாமல் ஏற்படும் அன்னிய செலவாணிகளால் உண்டாகும் பொருளாதார இழப்பீடுகளை உணர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் டாக்டர் மாரிமுத்து உள்பட டாக்டர் கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் ஜெகன் நன்றி கூறினார். நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story