விவசாயிகள் ‘பாரத் பந்த்’ குமரியில் 22 இடங்களில் சாலை மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,155 பேர் கைது
விவசாயிகளின் ‘பாரத் பந்த்‘-க்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,155 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நாடு முழுவதும் (பாரத் பந்த்) முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்தனர். இதற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. முழு அடைப்புக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் நாகர்கோவிலை பொறுத்த வரையில் ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டும் மூடப்பட்டு இருந்தன.
மேலும் அரசு போக்குவரத்து கழகத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதே போல ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், முந்திரி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
22 இடங்களில் மறியல்
இதுதவிர குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில், மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை, குளச்சல், அருமனை உள்பட 22 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. கருங்கலில் நடந்த போராட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., வேர்கிளம்பியில் நடந்த போராட்டத்தில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட மாவட்டம் முழுவதும் 1,155 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 250 பேர் பெண்கள் ஆவார்கள்.
குமரி மாவட்டத்தில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடந்தபோதும் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. கொரோனா காரணமாக தற்போது 620 பஸ்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் நேற்று இயக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 11 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பு...
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். அந்தோணி, அகமது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், சிவராஜ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகர தலைவர் அலெக்ஸ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் ஆல்பர்ட், மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கண்டன கோஷங்களை எழுப்பியபடி அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட மொத்தம் 71 பேர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியல் போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மகராஜ பிள்ளை (தி.மு.க.), சக்திவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), முருகானந்தம் (காங்கிரஸ்), நீலகண்டன் (ம.தி.மு.க.), கல்யாணசுந்தரம் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 20 பேரை ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜானகி கைது செய்தார். பின்னர், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல் திட்டுவிளை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அணில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தோவாளை ஒன்றிய காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பூதப்பாண்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திட்டுவிளை
இதேபோல், கன்னியாகுமரி விவசாயிகள், தொழிலாளர்கள் நலச்சங்கம், வியாபாரிகள் நலச்சங்கம், மற்றும் அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பில் திட்டுவிளை பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர் நலச்சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அன்சார், துணை தலைவர் இப்ராகிம், பச்சை தமிழகம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன், பிராங்ளின்(தி.மு.க.), சமூக ஆர்வலர் முகமது ராபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈத்தாமொழி சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரெகுபதி தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 19 பேரை ஈத்தாமொழி போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
கருங்கல் பஸ் நிலையம் முன் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர், அவர்கள் ஊர்வலமாக சென்று சந்தையில் செயல்பட்டு வந்த கடைகளை அடைக்குமாறு கூறினார்கள்.
பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 79 பேர் கைது செய்யப்பட்டனர். குளச்சலில் காமராஜர் பஸ் நிலையம் எதிரே நடந்த சாலைமறியல் போராட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ப பலர் கலந்து கொண்டனர். வேர்கிளம்பியில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 91 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story