விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல்: ஈரோடு மாவட்டத்தில் 187 பெண்கள் உள்பட 793 பேர் கைது
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 187 பெண்கள் உள்பட 793 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதுடெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்ட களத்தில் குதித்தன.
நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ஈரோடு மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சாலை மறியல்
ஈரோடு சோலார் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ம.சந்திரன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ஜபருல்லா, மாணவர் அணி அமைப்பாளர் கு.கபிலன், நகர இளைஞர் அணி செயலாளர் ஹரி கிருஷ்ணன், அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் சோலார் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய அவர்கள் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். ஊர்வலமாக நடந்து செல்ல தொடங்கிய அவர்கள் சோலார் ரவுண்டானா பகுதிக்கு வந்தனர்.
திடீரென்று அங்கு போக்குவரத்து சீரமைப்புக்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை இளைஞர்கள் தள்ளிக்கொண்டு சாலையின் நடுவில் வைத்தனர். 3 தடுப்பு வேலிகளை வரிசையில் வைத்துக்கொண்டு, இடைவெளியில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. சாலையின் 2 பக்கங்களும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவசர சிகிச்சைக்காக சென்றவர்கள், கர்ப்பிணிகள் சென்ற வாகனங்களை மட்டும் செல்வதற்கு போராட்டக்குழுவினர் அனுமதி அளித்தனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த போராட்டம் நீடித்தது.
மின்வாரிய ஊழியர்கள்
இதற்கிடையே அந்த பகுதி கம்யூனிஸ்டு கட்சியினரும் வந்து சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
மின் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு குழுவின் மண்டல செயலாளர் ஜோதி மணி தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
793 பேர் கைது
சேலம் கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து ஒட்டு மொத்த இந்திய மக்களையும் உணவுத்தேவைக்கு பெரு நிறுவனங்களிடம் கையேந்த வைக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது. மேலும், ஊட்டி மலை ரெயிலை தனியாருக்கு வழங்கியதை கண்டித்தும் ரெயில்வே ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதுபோல் ஈரோடு டவுன் உள்கோட்டம் பகுதியில் சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், மூலப்பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்க், திண்டல் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட 221 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 187 பெண்கள் உள்பட 793 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story