மண் வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை


மண் வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 9 Dec 2020 8:49 PM IST (Updated: 9 Dec 2020 8:49 PM IST)
t-max-icont-min-icon

மண் வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறை சார்பில் உலக மண் வள நாள் நடைபெற்றது. இதையொட்டி கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஒன்றியங்களுக்குட்பட்ட மரிக்கம்பள்ளி, பெத்தனப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி, பெல்லாரம்பள்ளி, காள்வேஅள்ளி, மருதேரி, தட்ரஅள்ளி மற்றும் மாரிசெட்டிப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மண்வள அட்டையை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சண்முகம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மைத்துறை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர்கள் சுரேஷ்குமார், முருகன், வேளாண்மை அலுவலர்கள், கண்காணிப்பாளர் குருராஜன், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், நிலத்தின் மண்ணை பற்றியும் அதன் தன்மையையும் அறியாமல் தேவைக்கு அதிகமான செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி தொடர் சாகுபடி செய்வதால் மண் வளம் குன்றி பணவிரயம் ஏற்படுவதுடன் மகசூலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மண் ஆய்வு செய்வது மிக அவசியம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக தழைச்சத்தினை விவசாயிகள் வயலுக்கு இடுவதை தவிர்த்து சிபாரிசு செய்யப்பட்ட அளவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மண் வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story