தூத்துக்குடியில், 60 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல்போன 60 செல்போன்கள் மீட்கப்பட்டு நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 2019 முதல் இதுவரை செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன், பெர்லின் பிரகாஷ், போலீஸ்காரர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன், புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்படி சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே 102 செல்போன்களை மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு கலந்து கொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வன், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story