பிசான சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு
பிசான சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்,
புரெவி புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் அணைகள் வேகமாக நிரம்பி உள்ளது.
இந்த நிலையில் மணிமுத்தாறு அணை 100 அடியை தாண்டியதை அடுத்து பிசான நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அணை முழு கொள்ளளவை எட்டும் முன்பே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. 4 ரீச்சுகள் கொண்ட இந்த அணையில் இருந்து 3, 4-வது ரீச்சுகளின் கீழ் 12,018 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்வகையில் நீரின் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 102.35 அடியாக உள்ளது.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முருகையா பாண்டியன், நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, நகர செயலாளர்கள் விக்கிரமசிங்கபுரம் கண்ணன், அம்பை அறிவழகன், மணிமுத்தாறு ராமையா, அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, விக்கிரமசிங்கபுரம் நகர இளைஞர் அணி செயலாளர் அருண், பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை, மணிமுத்தாறு அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பழனிவேல், மணிமுத்தாறு கால்வாய் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர்கள் மாரியப்பன், ரமேஷ்குமார், மகேஷ்வரன், வினோத்குமார், சிவகணேசன், போர்மேன் காளிகுமார் மற்றும் பொதுப்பணித் துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும் திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story