வேப்பூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
வேப்பூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில், ஊராட்சி தலைவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து ஓர் ஆண்டு முடிவடையும் நிலையில், மாநில அரசின் நிதி ஊராட்சிகளுக்கு கிடைப்பதில்லை.
உரிய நடவடிக்கை
இதனால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர இயலாத நிலை உள்ளதால், மாநில அரசின் நிதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 மாதங்களாக ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாநில நிதிக்குழு மானிய நிதியை உடனடியாக வழங்குவதுடன், மாதம் தவறாமல் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, பாகுபாடின்றி அனைத்து ஊராட்சிகளுக்கும் பிரித்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story