புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்திற்கு செல்லலாம் முத்தரசன் பேட்டி
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்திற்கு செல்லலாம் என கரூரில் முத்தரசன் கூறினார்.
கரூர்,
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்த பொது வேலைநிறுத்த போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. எந்தவொரு இடத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல விவசாயி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ஆதரிப்பதே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே இரு அரசுகளையும் எதிர்த்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக கேரளா போன்ற சில மாநில அரசுகள் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். தமிழக அரசும் நீதிமன்றத்திற்கு செல்லலாம் அல்லது சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நடத்தி இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். இதில் ஒன்றை தமிழக அரசு செய்ய வேண்டும்.
ரஜினிகாந்த் மிகச்சிறந்த நடிகர்
ரஜினிகாந்த் மிகச்சிறந்த நடிகர் நானும் அவரது ரசிகர் தான். அவர் நீண்ட காலமாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து, தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தார். தற்போது வருகிற 31-ந்தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். புதிதாக என்ன மாதிரியான கொள்கையை ரஜினிகாந்த் அறிவிக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அப்போதுதான் பாதிப்பா? பாதிப்பு இல்லையா என்ற முடிவுக்கு வரமுடியும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற உள்ளது. இதில் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story