வடிகால் பகுதியை உடைத்து வேல்ராம்பட்டு ஏரி நீர் வெளியேற்றம்
வேல்ராம்பட்டு ஏரியின் வடிகால் பகுதி உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புதுச்சேரி,
புதுவை நகரப்பகுதியில் உள்ள வேல்ராம்பட்டு ஏரி தற்போது பெய்த கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 2 மீட்டர் உயரம் கொண்ட இதன் வடிகால் பகுதியில் (தண்ணீர் நிரம்பிய வடியும் பகுதி) தண்ணீர் வெளியேறி வந்தது.
இருந்தபோதிலும் ஏரி அதிக உயரம் கொண்டதாக இருப்பதால் கொம்பாக்கம் பகுதியில் தேங்கிய நீர் ஏரிக்குள் வடிய முடியாத நிலை இருந்தது. கடந்த ஒரு வாரமாக கொம்பாக்கம் பகுதியில் சில இடங்களிலும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியிருந்தது.
வெளியேற்றம்
ஊருக்குள் தேங்கிய நீரை வடிய வைக்க ஏரியில் தண்ணீர் தேங்கும் உயரத்தை குறைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ½ அடி உயரத்துக்கு வடிகால் பகுதியை உடைத்து தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால் பகுதி உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஏரியின் நீர்ப்பிடிப்பு உயரம் குறைந்துள்ளது. கொம்பாக்கம் பகுதியில் குடியிருப்புக்குள் தேங்கிய தண்ணீர் தற்போது வடியத் தொடங்கி உள்ளது. மழையும் சற்று ஓய்ந்துள்ளதால் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story