டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன்கபீர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கந்தசாமி, தொகுதி செயலாளர் அன்பரசன், சுற்றுசூழல் பாசறை மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், தொகுதி தலைவர் கோவிந்தராஜ், பேச்சாளர் கரிகாலன், பிரிவு மாவட்ட தலைவர் நசரேத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தஞ்சை மண்டலத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story