வடமதுரை, அய்யலூரில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்பு


வடமதுரை, அய்யலூரில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Dec 2020 11:28 AM IST (Updated: 10 Dec 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வடமதுரை மற்றும் அய்யலூரில் நேற்று நடைபெற்றது.

வடமதுரை,

வடமதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வடமதுரை மற்றும் அய்யலூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் (வடமதுரை), மணி (அய்யலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், “கடந்த முறை எப்படி வேடசந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்றதோ அதை போன்று வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும். வேளாண் மசோதாக்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. வினர் வீண் போராட்டங் களின் மூலம் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்” என்றார். இதையடுத்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பழனிசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜ்மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story