தூத்துக்குடி, கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், திராவிடர் கழக தென்மண்டல செயலாளர் பால்ராஜேந்திரன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சம்சுதீன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலவிரயம் செய்வதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது ஜான், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முனியசாமி, சமன் குடிமக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஜான் பி.ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கோவில்பட்டி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். வக்கீல் அணி மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், மாவட்ட துணை செயலாளர் மோகன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபா வளவன், நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் விஜயா அந்தோணி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் கரிசல் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story