தினத்தந்தி செய்தி எதிரொலி: குளித்தலையில் பழைய சார்பு நீதிமன்ற கட்டிட புனரமைப்பு பணி தொடக்கம்


குளித்தலையில் சார்பு நீதிமன்றம் கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்த செடிகள் அகற்றப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்
x
குளித்தலையில் சார்பு நீதிமன்றம் கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்த செடிகள் அகற்றப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 11 Dec 2020 1:45 AM IST (Updated: 11 Dec 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக குளித்தலையில் பழைய சார்பு நீதிமன்ற கட்டிட புனரமைப்பு பணி தொடங்கியது.

சார்பு நீதிமன்ற கட்டிடம்
குளித்தலையில் உள்ள பழைய சார்பு நீதிமன்ற கட்டிடம் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் பழமை மாறாமல் இருப்பதற்காகவும், பழங்கால கட்டிடத்தை பாதுகாக்கும் பொருட்டு இதனை புதுப்பிக்க தமிழக அரசு ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதையடுத்து சார்பு நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது.

இந்த கட்டிடத்தில் பழுதடைந்த, சேதமான ஓடுகள், ஓடுகள் பொருத்த பயன்படுத்தப்படும் விட்டம், மரத்திலான பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் பழமை மாறாமல் அக்காலத்தில் இருந்தது போலவே இருக்கும் வகையில் புனரமைக்கும் பணிகள் குளித்தலை பொதுப்பணித் துறை கட்டிடம் மூலம் கடந்த 2019-ல் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் பல இடங்களில் செடிகள் வளர தொடங்கிவிட்டன. இந்த செடிகளின் வேர்கள் கட்டிடத்தினுள் வளர்ந்து அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

தினத்தந்தி செய்தி எதிரொலி
கட்டிடம் புனரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியும் பயனற்று போய்விடும். எனவே இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மையை பாதுகாக்க இதில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி உடனடியாக புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தினத்தந்தியில் கடந்த 3-ந்தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து இச்செய்தியின் எதிரொலியாக இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் வளர்ந்து இருந்த செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் இக்கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கட்டிடத்தின் புனரமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என செய்தி வெளியிட்டு தற்போது பணிகள் நடக்க காரணமாக இருந்த தினத்தந்தி நாளிதழுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Next Story