வடகாடு பகுதியில், பூக்கள் உற்பத்தி குறைவால் விலை உயர்வு; மல்லிகை, முல்லை பூக்களின் விலை ஆயிரம் ரூபாயை எட்டியது
வடகாடு பகுதியில் பூக்கள் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது. மேலும் மல்லிகை, முல்லை பூக்களின் விலை ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.
பூக்கள் உற்பத்தி குறைவு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் உற்பத்தி விவசாயிகள் அதிகளவில் விளைவிக் கின்றனர். இப்பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லிகை எனப்படும் காக்கரட்டான், ரோஜா, சம்பங்கி, பிச்சி, அரளி, சென்டி போன்ற பூக்களை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்த நிலையில் தற்போது ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூச்செடிகள் மறத்துப்போன நிலையில் பூக்கள் உற்பத்தியும் வெகுவாக
குறைந்துள்ளது இப்பகுதி பூ விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
பூக்களின் உற்பத்தி குறைவால் கொரோனா பொதுத்தடைக்கு பிறகு மூன்றாவது முறையாக மல்லிகை, முல்லை பூ போன்ற பூக்களின் விலை ரூ.1,000-த்தை எட்டியது. இது ஒரு வகையில் இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பூக்களின் உற்பத்தி குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள பூ கமிஷன் கடைகளுக்கும் 20 கிலோ முதல் 40, 50 கிலோ வரை என்று வந்த பூக்கள், தற்போது குறைந்து 7 முதல் 15 கிலோ மட்டுமே உற்பத்தி குறைந்து விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது. வடகாடு
பகுதியில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. தற்போது முகூர்த்த தினங்களையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
மல்லிகை ரூ.1000
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அதிகாலை குறிப்பிட்ட நேரத்திற்குள் பறிக்கப்படும் பூக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகள் மூலமாக பெறப்பட்டு ஒவ்வொரு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இப்பகுதி களில் நறுமண தொழிற்சாலை அமைந்தால் பூக்களுக்கு ஒரு நிரந்தர விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், இப்பகுதி பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.
தற்போது பூக்கள் விலை நிலவரம் கிலோவுக்கு, மல்லிகை ரூ.1,000, முல்லை ரூ.1,000, கனகாம்பரம் ரூ.700, காக்கரட்டான் ரூ.600, சம்பங்கி ரூ. 150, அரளி ரூ.150, ரோஜா ரூ.80, சென்டி ரூ.100, பிச்சி ரூ.50 என்று கமிஷன் கடை மூலமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது.
Related Tags :
Next Story