ரஜினிகாந்த் கட்சியால் தி.மு.க.வுக்கு பாதிப்பு; மதுரையில் எச்.ராஜா பேட்டி


எச்.ராஜா
x
எச்.ராஜா
தினத்தந்தி 11 Dec 2020 2:55 AM IST (Updated: 11 Dec 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

“ரஜினிகாந்த் கட்சியால் தி.மு.க.வுக்குதான் பாதிப்பு” என மதுரையில் எச்.ராஜா தெரிவித்தார்.

வேளாண் சட்டம்

பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க. தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது. வேளாண் சட்டங்கள் குறித்து தி.மு.க. தவறாக பிரசாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒப்பந்த பண்ணைமுறை நடைமுறையில் உள்ளது. வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரியாமல் பேசுகிறார்கள்.

தி.மு.க.வுக்கு பாதிப்பு
ஜனவரி 31 வரை மட்டுமே ஆ.ராசாவால் பேச முடியும். 2ஜி தீர்ப்பு விரைவில் வர உள்ளதை ஆ.ராசா ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை காப்பாற்ற கொண்டு வரப்பட்ட சட்டம். தி.மு.க.வுக்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

1996-ல் ரஜினிகாந்த் தி.மு.க.வுக்கு குரல் கொடுத்தார். அப்போது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறினார். ஆனால் தற்போது ரஜினிகாந்த் கட்சியால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தான் பாதிப்பு. ரஜினிகாந்த் 2017-ம் ஆண்டே கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்து அறிவித்து இருந்தார். ரஜினிகாந்த் சுயமாக சிந்திக்க கூடியவர். அவரை குறைத்து மதிப்பிட கூடாது. தமிழகத்திற்கு அமித்ஷா வருகையால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story