வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் மகாபுகழேந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆராசு பிரகாஷ் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஹாஜா, நகர பொருளாளர் வெள்ளிமலை, நகர அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, மாநில துணைச்செயலாளர் பூமிநாதன், விவசாய அணி மாநில துணைச்செயலாளர் முருகையன், நாடாளுமன்ற துணைச்செயலாளர் அருள் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மோகன், மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் சிறுத்தை செல்வம், கோட்டூர் ஒன்றிய பொறுப்பாளர் சிற்றரசன், நகர பொறுப்பாளர் ஆனந்த், எழிலூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கார்த்தி, ஒன்றிய பொறுப்பாளர் சிறுத்தை அந்தோணி மற்றும் பலர் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகர அமைப்பாளர் ஜோசப் நன்றி கூறினார்.
மன்னார்குடி
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மன்னார்குடி பஸ் நிலையம் எதிரே ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் வெற்றி, மாவட்ட துணைச்செயலாளர் முல்லைவளவன், நகரசெயலாளர் அறிவுக்கொடிஎழிலரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் புதியவன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

Related Tags :
Next Story