34 நாட்களில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.90 லட்சம்
34 நாட்களில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.90 லட்சம் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் முருகனின் ஐந்தாம் படை வீடான கோவில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதில், கோவில் உண்டியலில் பணமாகவும், தங்க நகை, வெள்ளிப் பொருட்களாகவும் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த நிலையில் கோவிலில் கடந்த 34 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையரும், செயல் அலுவலருமான பழனிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஏராளமான கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணினார்கள். இதில் கோவில் உண்டியல் மூலம் ரூ.89 லட்சத்து 95 ஆயிரத்து 420, தங்கம் ஆயிரத்து 175 கிராம், வெள்ளி 10 ஆயிரத்து 420 கிராமும் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story