சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி துப்புரவு ஊழியர்கள் போராட்டம்


சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி துப்புரவு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2020 5:29 AM IST (Updated: 11 Dec 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கடந்த 7-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்குளம்,

உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஊழியர் களுக்கு கடந்த மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப் படவில்லை. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்த சாமியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கடந்த 7-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு திரண்ட ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் கூட்டு நடவடிக்கை குழு பொறுப்பாளர்கள் சகாயராஜ், பழனிவேலு, முனியன், மாணிக்கம், ரமேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் கந்தசாமி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story