புதுவை அருகே பயங்கரம் ரவுடிகள் மோதலில் ஒருவர் வெட்டி கொலை தப்பி ஓடிய 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
புதுவை கரிக்கலாம்பாக்கத்தில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்,
புதுவை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ரவி என்கிற ரவிக்குமார் (வயது27). ரவுடி. திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். அதே பகுதியில் வசித்து வருபவர்கள் அருணாசலம் (30), அருண்பாண்டியன் (25). அண்ணன், தம்பியான இவர்கள் ரவுடிகள். நேற்று முன்தினம் ரவிக் குமாருக்கும், அருண்பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் முகத்தில் ரவிக்குமார் கத்தியால் வெட்டினார். இதையடுத்து அவரை பழிக்குப்பழி வாங்க அருண்பாண்டியனும், அவரது அண்ணன் அருணாசலமும் சதி திட்டம் தீட்டினர்.
இந்தநிலையில் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பாழடைந்த மருத்துவமனை குடியிருப்பில் நேற்று இரவு ரவிக்குமார் தனது நண்பர்கள் கார்த்திக், சித்தானந்தன் ஆகியோருடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.
வெட்டிக் கொலை
இதுபற்றி தெரிந்து கொண்ட அருணாசலம், அருண்பாண்டியன் ஆகியோர் கூட்டாளி மணிகண்டன் என்பவருடன் சென்று அங்கு கிடந்த மது பாட்டில்களை எடுத்து கார்த்திக், சித்தானந்தன் ஆகியோரை தாக்கினர். குடிபோதையில் இருந்த ரவிக்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செத்தார். இதுபற்றி தெரியவந்ததும் மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தப்பிஓடிய அருணாசலம், அருண்பாண்டியன், மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story