வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் இணையவழியில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்
வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் இணையவழியில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் விழுப்புரம் கலெக்டர் தகவல்
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெளிநாடுகளில் வேலை, கல்வி மற்றும் சார்பு நுழை இசைவு கோரும் இந்தியர்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் போன்ற பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதி செய்ய இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் முத்திரையிடப்பட வேண்டும் என்று சில நாடுகள் கோருவதால் மேற்கண்ட ஆவணங்களை இணையவழியில் சரிபார்த்து முத்திரையிடுவதற்கு ஏதுவாக மத்திய அரசு ‘esanad’ என்ற இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் ‘esanad’ இணையவழி மூலம் சரிபார்க்கப்பட்டு முத்திரையிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தொடர்புடைய தூதரகங்கள் முத்திரையிடப்பட்ட சான்றிதழ்கள் கோரும்பட்சத்தில் பொதுமக்கள் ‘www.esa-nad.nic.in’ என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து ஆவணங்களை ‘பிடிஎப்’ வடிவில் பதிவேற்றம் செய்து உரிய கட்டணம் செலுத்தினால் இணையவழியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அவரவர் வீடுகளுக்கே சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த இணையவழி சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story