சங்கராபுரம் அருகே 3 போலி டாக்டர்கள் கைது


சங்கராபுரம் அருகே 3 போலி டாக்டர்கள் கைது
x
தினத்தந்தி 11 Dec 2020 7:12 AM IST (Updated: 11 Dec 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே 3 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூரில் மருத்துவம் படிக்காமலேயே 3 பேர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவ ஆய்வாளர் கதிரவன் தலைமையில் ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலன், மருத்துவ அலுவலர்கள் கீதா, பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கடுவனூரில் தனித்தனி இடங்களில் உள்ள 3 மருந்தகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த சந்திரசேகரன் மகன் கணேசன் (வயது 49), ராமசாமி மகன் ராமச்சந்திரன் (43) மற்றும் சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (41) ஆகிய 3 பேரும் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

3 பேர் கைது

இதையடுத்து அவர்களிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 3 பேரையும் சங்கராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். கடுவனூரில் ஒரே நாளில் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story