20,071 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்


20,071 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2020 8:19 AM IST (Updated: 11 Dec 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகள் 20,071 பேருக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா தெரிவித்தார்.

கடலூர்,

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2020-2021-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த விழாவில் இலவச சைக்கிள்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்ட போது, 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கு பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 8 ஆயிரத்து 716 பேருக்கும், 11 ஆயிரத்து 355 மாணவிகள் என 20 ஆயிரத்து 71 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

பொருத்தும் பணி

முதல் கட்டமாக 7 ஆயிரத்து 460 சைக்கிள்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 12 இடங்களில் உதிரிபாகங்களாக இறக்கி வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை சைக்கிள்களாக பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது தவிர மேலும் சைக்கிள்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்களும் வந்தவுடன் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் பிளஸ்-1 மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.

Next Story