சர்க்கரை அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


சர்க்கரை அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2020 8:55 PM IST (Updated: 11 Dec 2020 8:55 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சர்க்கரை அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம். தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தர்மபுரி, 

பொது வினியோகத்திட்டத்தில் சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில், பெரும்பாலானோர் அந்த குடும்ப அட்டைகளை அரிசி பெற கூடியவைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து வருகிற 20-ந்தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கலாம். இதேபோல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்.

சர்க்கரை குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story