சிவகங்கையில் இன்று நடக்கிறது; அ.தி.மு.க. மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; 3 அமைச்சர்கள் பங்கேற்பு


சிவகங்கையில் இன்று நடக்கிறது; அ.தி.மு.க. மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; 3 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Dec 2020 4:47 AM IST (Updated: 12 Dec 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் இன்று(சனிக்கிழமை) அ.தி.மு.க. மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

நலத்திட்ட உதவிகள்
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிவகங்கையில் நடைபெறுகிறது. விழாவுக்கு மாணவரணி மாநில துணை செயலாளர் ஆசைதம்பி தலைமை தாங்குகிறார்.

மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் குமார், மாநில மாணவர் அணி துணைச்செயலாளர்கள் சோலை கண்ணன், கோவிலம்பாக்கம் மணிமாறன், பாபு, ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்டசெயலாளர் என்.எம்.ராஜா வரவேற்று பேசுகிறார். விழாவில் கட்சி சார்ந்த, கட்சி சாராத இளைஞர்கள் சுமார் 2 ஆயிரம் பேரை கழகத்தில் இணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

அமைச்சர்கள் பங்கேற்பு
அ.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் புதிதாக கட்சியில் சேர்பவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசுகிறார்.

விழாவில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்கள்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், நாகராஜன், கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் மாணவரணி நிர்வாகிகள் அய்யப்பன், சுந்தரபாண்டியன் நன்றி கூறுகிறார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி இணை செயலாளர்கள் நாகராஜன், சரவண கார்த்திகேயன், குமார், அகரம் கணேஷ், சதீஸ்சீலன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட மாணவரணி தலைவர் ரஜபுதின், துணை தலைவர் அன்பு இயல்முத்துகண்ணன், மாவட்ட மாணவரணி பொருளாளர் மணிமாறன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Next Story