தமிழகம் மீட்போம் தலைப்பில் ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின் காணொலியில் பிரசாரம்; தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஏற்பாடு


மு.க.ஸ்டாலின்
x
மு.க.ஸ்டாலின்
தினத்தந்தி 12 Dec 2020 5:17 AM IST (Updated: 12 Dec 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மீட்போம் தலைப்பில் ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின் காணொலியில் பிரசாரம் செய்கிறார்.

தேர்தல் பிரசாரம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளுக்காக பல்வேறு வியூகம் வகுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகளிடம் காணொலி காட்சியில் பேசிவருகிறார். இந்தநிலையில் தமிழகம் மீட்போம் 3-வது கட்ட காணொலி காட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறார். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் அதன் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 திருமண மகாலில் காணொலி காட்சி பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

ராமநாதபுரம் கேணிக்கரை யாபா மகாலில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுபினர்கள், மாநில நிர்வாகிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 யூனியன் தலைவர்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், தி.மு.க. சார்பு அணி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கக்கூடிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் தி.மு.க.வில் நீண்ட காலமாக பயணித்து வரக்கூடிய 200 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட உள்ளது.

அழைப்பு
மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பட்டணம்காத்தான் புதிய செக்போஸ்ட் அருகே உள்ள நிஷா மகாலில் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனைப்படி நடைபெறுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிறப்புரை ஆற்றுகிறார். ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றிய தி.மு.க. மேற்கு பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், மண்டபம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், தி.மு.க. முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மண்டபம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் அழைப்பு விடுத்துள்ளார். இது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரூர், நகர, ஒவ்வொரு யூனியன் பகுதிகளிலும் நடக்க உள்ள காணொலி காட்சி பொதுக் கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

Next Story