திருத்துறைப்பூண்டியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் தாசில்தாரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு


திருத்துறைப்பூண்டியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் தாசில்தாரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
x
தினத்தந்தி 12 Dec 2020 5:45 PM IST (Updated: 12 Dec 2020 5:45 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தாசில்தாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். இதில் நகர குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கோபு, ஜெயபிரகாஷ், தண்டபாணி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகவும், கனமழை காரணமாகவும் சேதமடைந்த வீடுகளுக்கு உடனடியாக புதிய வீடு கட்டித்தர வேண்டும். முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.30 ஆயிரமும், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.15 ஆயிரமும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story