இன்று போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது


இன்று போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 13 Dec 2020 3:30 AM IST (Updated: 13 Dec 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறும் போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வு மொத்தம் 13 மையங்களில் நடக்கிறது. இதில் 3 ஆயிரத்து 54 பெண்கள் உள்பட 16 ஆயிரத்து 134 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் 11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 55 இன்ஸ்பெக்டர்கள், 180 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,400 போலீசார் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், போலீஸ் பணிக்கான தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று தூத்துக்குடியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு மேற்பார்வை அதிகாரியான ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயகவுரி கலந்துகொண்டு, இந்த தேர்வின்போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக பேசினார்.

கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, செல்வன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், பொன்னரசு, கலைக்கதிரவன், கண்ணபிரான், இளங்கோவன், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story