அவுரங்காபாத்தில் அமைய இருக்கும் பால்தாக்கரே நினைவுச்சின்னம் தேசியவாதத்தை ஊக்குவிக்கும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு


அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதற்கான கல்வெட்டை திறந்து வைத்த காட்சி.
x
அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதற்கான கல்வெட்டை திறந்து வைத்த காட்சி.
தினத்தந்தி 13 Dec 2020 1:03 AM IST (Updated: 13 Dec 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

அவரங்காபாத்தில் அமைய இருக்கும் பால்தாக்கரே நினைவுச்சின்னம் தேசியவாதத்தை ஊக்குவிக்கும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

நினைவுச்சின்னம்
அவுரங்காபாத்தில் ரூ.1,680 கோடி செலவில் குடிநீர் திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார். இந்த விழாவின் போது அவுரங்காபாத்தில் அமையவிருக்கும் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் நினைவுச்சின்னத்திற்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் விழாவில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

தேசியவாதம், இந்துத்வா
ஆட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கியதாக அறியப்படும் தலைவரின் நினைவுச்சின்னத்துக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் நான் அடிக்கல் நாட்டுவது தற்செயலாக அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் அடுத்த தலைமுறையினருக்கு தேசியவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்துத்துவாவை பறைசாற்றுவதாகவும் அமையும்.

இங்கு நிறைவேற்றப்பட உள்ள குடிநீர் திட்ட பணிகளை நான் முன்னறிவிப்பு இன்றி பார்வையிட வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story